6 மணிநேர தடங்கல்; 5.9 பில்லியன் டொலர்களை இழந்த “Facebook” நிறுவனம்!

You are currently viewing 6 மணிநேர தடங்கல்; 5.9 பில்லியன் டொலர்களை இழந்த “Facebook” நிறுவனம்!

“Facebook” நிறுவனத்தின் “Facebook”, “Instagram” மற்றும் “Whatsapp” செயலிகள், கடந்த திங்களன்று சுமார் 6 மணிநேரம் தடைப்பட்டிருந்ததையடுத்து “Facebook” நிறுவனத்துக்கு சுமார் 5.9 பில்லியன் அமெரிக்கர் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்தின் தகவல்பரிமாற்ற “வழங்கிகள் / Servers” இல் மேம்பாடுகளை மேற்கொண்ட சமயம், தொடர்பாடலில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறுகளாலேயே மேற்படி நிறுவனத்தின் ஆளுமையின் கீழிருக்கும் குறித்த செயலிகள் அனைத்தும் 6 மணிநேரம் தடைப்பட்டிருந்ததாகவும், இதனால் பயனாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், “Facebook” நிறுவனத்தின் நிறுவுனர் “Mark Zukerberg” தெரிவித்துள்ளார்.

6 மணிநேரங்களுக்கு நீடித்த இத்தடங்கலின் காரணமாக நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் வீழ்ச்சி கொண்டதாலேயே இவ்விழப்பு ஏற்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. தகவல்கள் பரிமாற்றம் தொடர்பில் “Facebook” நிறுவனம் முறை தவறி நடந்துகொண்டதாக 2019 ஆம் ஆண்டில் சர்ச்சைகள் கிளப்பப்பட்ட நிலையில் அந்நிறுவனம் கடும் கண்டங்களுக்கு ஆளாகியதோடு, பலத்த பொருளாதார இழப்பையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொதுவெளியில் பகிரக்கூடாத தகவல்களை “Facebook” நிறுவனத்தினூடாக பகிரப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருப்பதை கண்டிக்கும் அமெரிக்க காங்கிரஸ், மேற்படி விடயங்களில் அந்நிறுவனம் இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டுவராவிடத்து, அமெரிக்க காங்கிரஸ் நடவடிக்கைளை எடுக்கும் நிலைமை வந்தால், “Facebook” நிறுவனம் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிவருமெனவும் எச்சரிக்கப்படுகிறது.

இதேவேளை, “Facebook”, “Instagram” மற்றும் “Whatsapp” செயலிகள், கடந்த திங்களன்று சுமார் 6 மணிநேரம் தடைப்பட்டிருந்ததையடுத்து, “Telegram” செயலி அதியுச்ச பாவனைக்கு வந்துள்ளதாகவும், இதனால் “Telegram” நிறுவனம் பல மில்லியன் டொலர்களை சம்பாதித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments