60,000 வீரர்களை இழந்த ரஷ்யா: பெரும் பின்னடைவில் புடின் படை!

You are currently viewing 60,000 வீரர்களை இழந்த ரஷ்யா: பெரும் பின்னடைவில் புடின் படை!

உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் இதுவரை 60,000 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படை மதிப்பிட்டுள்ளது. பிப்ரவரி இறுதியில் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரானது எட்டு மாதங்கள் ஆகியும் நிறைவடையாத நிலையில், தற்போது ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதிளை உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தி மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று 5000 வீரர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லைமன் நகரை உக்ரைனிய படைகள் சுற்றி வளைத்த தாக்குதல் நடத்தி மீட்டுள்ளனர்.

இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையானது, கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் உக்ரைனிய ஆயுதப்படை அக்டோபர் 2ம் திகதி வரையிலான இழப்பு மதிப்பினை வெளியிட்டுள்ளது, அதில் சுமார் 60,110 வீரர்களை ரஷ்ய படைகள் இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படை மதிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த போரில் ரஷ்யா 2,377 டாங்குகள், 264 போர் விமானங்கள், 227 ஹெலிகாப்டர்கள், 15 போர் கப்பல்கள் 4,975 கவச பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் 246 கப்பல் ஏவுகணைகள் ஆகியவற்றை இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments