இன்று 61 பாடசாலை மற்றும் அரிவரிச் சிறுவர்கள் தனிமைப்படுத்தல்!

இன்று 61 பாடசாலை மற்றும் அரிவரிச் சிறுவர்கள் தனிமைப்படுத்தல்!

பயிற்சிப்பாடசாலை(aks) மற்றும் குழந்தைகள் தோட்டத்தில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா தொற்றியதை அடுத்து 61 சிறுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது Vevelstadåsen பாடசாலையில் 36 சிறுவர்களும் 5 பணியாளர்களும் Vestråt குழந்தைகள் தோட்டத்தில் 25 குழந்தைகளும் 8 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் இப்படி நடந்தது கவலையளிப்பதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நோர்வேயில் 9 நகராட்சிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள