7இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப்படகுகள் அறுத்தழிப்பு!

7இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப்படகுகள் அறுத்தழிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட கடல் பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுள் அண்மைக்காலங்களாக தொடர்ச்சிய அதிகரித்துள்ள நிலையில் புயல்சீற்றம் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத நிலையில் நேற்று (07)மாத்தளன் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் அத்து மீறிய இந்திய இழுவைப்படகுகளை கண்டுள்ளார்கள்.
இதன்போது நான்கு மீனவர்களின் வலைகள் இந்திய இழுவைப்படகுகளால் அறுத்து விடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நான்கு மீனவர்களின் தலா ஒரு இலட்சத்தி 80 ஆயிரம் ரூபா பெறுமியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுக்கப்பட்டுள்ளதுடன் அவை கடலின் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன வெறும் படகுகளுடன் இன்று(08) காலை கரை திரும்பிய மீனவர்கள் சம்பவம் குறித்து மவாட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இந்தி மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள