7நாட்களும் கல்வி கற்பிக்க சிறீலங்கா திட்டம்!

You are currently viewing 7நாட்களும் கல்வி கற்பிக்க சிறீலங்கா திட்டம்!

பாடசாலைகள் வாரத்தில் ஏழு நாட்களும் திறக்கப்படலாம் என கல்வியமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

எனினும் கற்பித்தல்களை சிறிய சிறிய குழுக்களாக மாணவர்களை பிரித்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதால் ஏழு நாளும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளிற்கு செல்லவேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.மாணவர்களும் ஆசிரியர்கம் நான்கு நாட்களிற்கு மாத்திரம் பாடசாலைக்கு செல்லுவதை அடிப்படையாக கொண்ட முறையொன்று குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளா

30 பேர் உள்ள வகுப்புகளை இரண்டாக பிரிக்கும் திட்டமும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் ஒரே இடத்தில் பெருமளவு மாணவர்கள் காணப்படுவதை தவிர்ப்பதற்கே இந்த திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டுள்ள 868 பாடசாலைகள் இந்த முறையை பின்பற்றுவது சுலபமாகயிராது என தெரிவித்துள்ள அவர் 4.5 மில்லியன் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்புமே எங்களது முன்னுரிமைக்குரிய விடயம் என்பதால் இதனை நாங்கள் செய்தே ஆகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு இயல்புநிலைமையை திரும்பியதும் நாடாளவிய ரீதியில் உள்ள 10,194 பாடசாலைகளிலும் நோய் தொற்று அகற்றும் பணிகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அதன் பின்னர் கல்விசாரத ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்கு வந்து அதனை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள