7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  சிக்கியது லொறி!

You are currently viewing 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  சிக்கியது லொறி!

மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – யாழ் பிரதான வீதியின் வெள்ளங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை மறித்து சோதனையிட்டதில் லொறியில் இருந்து சுமார் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் லொறியுடன் இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலுப்பைக்கடவை சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments