’70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடாதீர்’

’70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடாதீர்’

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் சலுகை அரசியலில் ஈடுபடக் கூடாதென கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் வட. மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், 70 வருட உரிமைப் போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடக் கூடாதெனவும் கோரியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாடாளுமன்றத்துக்கு தன்னை தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கும் நன்றிகூறியுள்ளார். 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டிருக்காவிட்டால் தனது வெற்றி சாத்தியமாகியிருக்காதென்றும், இந்த கூட்டணியின் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலான தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

யாழில் 4 ஆசனங்களையும், வன்னி மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்த்திருந்த போதும் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்,  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் சாடினார். 

இதே செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து 70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடக்கூடாதென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.   

5 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments