எல்லைகள் கடந்து ஒலிக்கும் தமிழர் நீதிக்குரல் – ஈருருளிப் பயணம்!

You are currently viewing எல்லைகள் கடந்து ஒலிக்கும் தமிழர் நீதிக்குரல் –  ஈருருளிப் பயணம்!

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழீழமே அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி முன்னெடுக்கப்படும் ஈருருளிப் பயணம்  10 ஆம் நாளை நிறைவு செய்துள்ளது.

கடந்த 26.08.2026 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான இப்பயணம், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு மனுக்களை கையளித்ததன் பின்னர் ஐரோப்பிய நாடுகளை   ஊடறுத்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

7ஆம் நாளில் லக்சம்பேர்க் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு மனுக்கள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனி நோக்கி பயணம் தொடர்ந்தது. 8ஆம் நாளில் Dillingen நகரில் ஆரம்பித்து Saarbrücken நகரபிதாவிற்கான மனு கையளிக்கப்பட்ட பின்னர் Landau நோக்கி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

9ஆம் நாளான 04.09.2026 அன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பு இடம்பெற்றதுடன், தொடர்ந்து Karlsruhe நகரபிதாவிற்கான மனுவும் கையளிக்கப்பட்டது.

எல்லைகள் கடந்து ஒலிக்கும் தமிழர் நீதிக்குரல் - ஈருருளிப் பயணம்! 1

அதனைத் தொடர்ந்து  10 ஆம் நாளான நேற்று பிரான்ஸின் Gambsheim நகரை நோக்கி பயணித்த ஈருருளிப் பயணம், இறுதியாக Mairie de Schiltigheim, 110 Rte de Bischwiller, 67300 Schiltigheim பகுதியில் அன்றைய பயணத்தை நிறைவு செய்தது.

ஜெனிவாவில் எதிர்வரும் 14.09.2026 அன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலை சென்றடையும் வரை இப்பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

எம் தமிழ் உறவுகளே!

தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில்   தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான  நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும். 

தியாக தீபம்  லெப் கேணல்   திலீபன்    அவர்கள்  கூறிய “மக்கள் புரட்சி  வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற உன்னத வேணவாவினை நெஞ்சிருத்தி ​இப்போராட்டங்களுடன் அனைவரும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”. -“தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்” 

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

பகிர்ந்துகொள்ள

Leave a Reply