728 ஆளில்லா விமானங்களை ஏவி தாக்கிய இரசியா!

You are currently viewing 728 ஆளில்லா விமானங்களை ஏவி தாக்கிய இரசியா!

ரஷ்யாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலால் உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

728 ட்ரோன்கள் மற்றும் 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள், நாடு முழுவதும் உள்ள நகரங்களை பல அலைகளில் வீசிய ரஷ்யா உக்ரைனை தாக்கியுள்ளது.

சமாதானத்தை அடையவும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில் ரஷ்யாவின் இந்த மிக துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் தலைநகர் கியேவுக்கு, அமெரிக்கா அதிக ஆயுதங்களை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து இந்த இரவு நேர தாக்குதல் நடந்துள்ளது.

எனவே, இது கடந்த வார போர்நிறுத்த இடைநீக்கத்தை இரத்து செய்வதாகும் எனவும் இவ்விடயம் குறித்து ட்ரம்ப் அறிந்திருக்கவில்லை என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply