77 பேரை துப்பாக்கியால் கொன்றவர் விடுதலை பெற முயற்சி!

You are currently viewing 77 பேரை துப்பாக்கியால் கொன்றவர்  விடுதலை பெற முயற்சி!

நோர்வேயில் 2011 ஆம் ஆண்டு 77 பேரை துப்பாக்கியால் கொன்ற தீவிர வலதுசாரி தீவிரவாதியான ண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் (Behring Breivik) 10 ஆண்டுகள் கடந்த நிலையில் பரோலில் வீடு செல்ல இன்று நேற்று நீதி மன்றம் சென்றுள்ளார்

அவரால் இனி சமூகத்திற்கு ஆபத்து இல்லை என்பதை வலியுறுத்தியே 21 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து முன்கூட்டியே விடுதலைபெற முயற்சிக்கிறார். ஆனால் நிபுணர்கள் அவரை முன்கூட்டியே விடுவிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். 

ப்ரீவிக்கை 2012 சிறையில் அடைத்ததில் இருந்து அவரைப் பின்தொடர்ந்த மனநல மருத்துவர் ராண்டி ரோசென்க்விஸ்ட், “ப்ரீவிக்கின் செயல்பாட்டில் பெரிய மாற்றங்களைக் கண்டறிய முடியவில்லை என்று என்னால் கூற முடியும் என்று கூறுகிறார்.

கொள்கை மற்றும் நடைமுறையில் பரோல் கோரும் ஒருவர் வருத்தம் காட்ட வேண்டும், மேலும் இதுபோன்ற செயல்களை ஏன் மீண்டும் செய்ய முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும் ஆனால் இவர் இவற்றை காண்பிக்கவில்லை.

விசாரணையில் ஆதாரங்களை வழங்கவேண்டும். மற்றும் மனநல அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். குற்றவாளிகள் தாங்கள் இனி ஆபத்தானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க இவை மிகவும் முக்கியமானது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments