950 பணியாளர்களை இடைநிறுத்தும் “Stena Line” கப்பல் நிறுவனம்!

950 பணியாளர்களை இடைநிறுத்தும் “Stena Line” கப்பல் நிறுவனம்!

சுவீடனின் புகழ்பெற்ற கப்பல் நிறுவனமான “Stena Line” நிறுவனம், தனது 950 பணியாளர்களை இடை நிறுத்துகிறது.

நோர்வே, சுவீடன், டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து, வாகனப்போக்குவரத்து மற்றும் உலகளாவிய ரீதியில் சரக்கு போக்குவரத்து போன்ற சேவைகளை வழங்கி வரும் மேற்படி நிறுவனம், “கொரோனா” பரவலின் காரணமாக ஐரோப்பாவுக்கான தனது பயணிகள் போக்குவரத்து சேவைகளை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்கள், அதன் சேவைகள் விரிவாக்கப்பட்டிருக்கும் அத்தனை நாடுகளிலும் இருந்தாலும், முதற்கட்டமாக சுவீடனிலிருக்கும் பணியாளர்களே இப்பணியாளர் குறைப்பில் அடங்குவதாகவும் “Stena Line” நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments