A9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற மகிழுந்து – இருவர் பலி|மக்களே அவதானம்!

You are currently viewing A9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற மகிழுந்து – இருவர் பலி|மக்களே அவதானம்!

வட தமிழீழம் ,ஏ 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் மீட்கப்பட்ட மகிழுந்து உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் மகிழுந்து  ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள்  தகவல் வழங்கியுள்ளனர்.

மகிழுந்து மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவர் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை சிங்கள பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply