“Burger King” உணவகங்களில் உணவருந்த தடை! தீவிரமடையும் “கொரோனா” கட்டுப்பாடுகள்!!

You are currently viewing “Burger King” உணவகங்களில் உணவருந்த தடை! தீவிரமடையும் “கொரோனா” கட்டுப்பாடுகள்!!

நோர்வே முழுவதிலுமுள்ள, “Burger King” விரைவு உணவகங்களில் அமர்ந்திருந்து உணவருந்துவதற்கு, அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

அதிகரித்துவரும் “கொரோனா” பரம்பலை தடுக்கும் ஒரு முயற்சியாகவே தாம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்திருக்கும் விரைவு உணவு நிறுவனத்தின் நோர்வே பிரிவு, எனினும், தமது உணவகங்களில் உணவுகளை பொதிகளாக வாங்கி வீடுகளுக்கு எடுத்துச்செல்ல முடியும் எனவும், தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கான நேரடி விநியோகத்தையும் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமது உணவகங்களில் மிகக்கடுமையான சுகாதார முறைமைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் மேற்படி நிறுவனம் அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள