CNN கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு!

  • Post author:
You are currently viewing CNN கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு!

ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் ‘Joe Biden’ ஐ விட ‘Trump’ 14 விழுக்காடு பின்தங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து CNN நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 57% பேர் டிரம்பின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் Donald ‘Trump‘ மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ‘Joe Biden‘ களமிறங்க உள்ளார்.

அதிபர் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த கருத்துக் கணிப்புகளை CNN நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. அதன்படி, கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

கருத்துக் கணிப்பில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, டிரம்புக்கு ஆதரவாக 38 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 14 விழுக்காடு கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் பெற்ற மிகக்குறைவான வாக்கு அளவு இதுவாகும்.

கொரோனா தாக்குதலுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கைகள் மற்றும் George Floyd கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குப் பின் நடைபெற்ற இந்த கருத்துக் கணிப்பில் ஒட்டுமொத்தமாக 57 விழுக்காடு பேர் டிரம்பின் தலைமைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரிடம் டிரம்புக்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு விழுக்காடு பேர் மட்டுமே சாதகமாக பதிலளித்துள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சியினரிடம் மிகக்குறைந்த ஆதரவைப் பெற்ற அதிபராக டிரம்ப் இருப்பது தெரியவந்துள்ளது.

CNN கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு! 1

George Floyd இன் மரணத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை டிரம்ப் கையாண்ட விதம் போராட்டத்தை தணிக்க உதவியாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிப்பதாக இருந்தது என 65 விழுக்காடு பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த Trump, CNN கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியானவை என்றும், கடந்த தேர்தலில் தன்னை விட Hillary அதிக ஆதரவைப் பெற்றிருந்ததாக அந்நிறுவனம் கூறியிருந்தது பொய்யாகிப் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள