Gardermoen : தனிமைப்படுத்தும் அறைகள் காலியாகவே உள்ளன!

  • Post author:
You are currently viewing Gardermoen : தனிமைப்படுத்தும்   அறைகள் காலியாகவே உள்ளன!

Gardermoen இலிருந்து ஐந்து நிமிடங்கள் தூரத்தில் கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கொண்டவர்களைப் பராமரிக்க மருத்துவமனை தயாராக உள்ளது – ஆனால் அங்கு நோயாளிகள் இல்லை!

எங்களிடம் 64 படுக்கைகள் உள்ளன, அவை விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தலில் தங்க வைக்க தயாராக உள்ளன. ஆனால், அவை பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் Gardermoen வழியாக பயணிக்கின்றார்கள். இருப்பினும், ​​இங்கு நான்கு நோயாளிகள் மட்டுமே இருக்கின்றனர் என்று LHL மருத்துவமனையின் துறை மருத்துவ அதிகாரி Nils Henrik Holmedahl கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அதிக அளவு தன்னார்வத்தை அடிப்படையாகக் கொண்டவை.

“அதாவது, பயணிகளுக்கு அறிகுறிகள் இருந்தால், அவர்களாக விமான நிலையத்தில் ஒரு செவிலியரை அணுக வேண்டும், செவிலியர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்.”

அறிகுறிகள் உள்ள அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி, பதில் கிடைக்கும் வரை மருத்துவமனையில் தனிமையில் வைக்க வேண்டும் என்று Ullensaker நகராட்சி மருத்துவ அதிகாரி Lars Meyer-Myklestad கூறியுள்ளார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருப்பதுபோல், பயணிகள் வரவில் நோய்ப்பாதிப்பு ஆய்வு (screening) எதுவும் Gardermoen இல் செய்யப்படுவதில்லை என்றும், அறிகுறிகளைக் கொண்டவர்கள் சுகாதார சேவையை நாடுவது பற்றிய தகவல்களைப் புரிந்து கொள்ளாவிட்டால், பயணிகள் விமான நிலையத்தின் வழியாக தடையின்றி வெளியே செல்ல முடியும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதை “வழக்கம் போல் வணிகம்«business as usual»” என்று Holmedahl கருதுகின்றார்.

LHL இப்போது Gardermoen இல் கடுமையான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள