“QR – குறியீடுகள்” தொடர்பில் அவதானம் தேவை! எச்சரிக்கும் கணினி நிபுணர்கள்!!

You are currently viewing “QR – குறியீடுகள்” தொடர்பில் அவதானம்  தேவை! எச்சரிக்கும் கணினி நிபுணர்கள்!!

தற்போது பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கும் “QR – குறியீடுகள்” தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்தோடு இருக்கவேண்டுமென நோர்வேயின் கணினித்துறை வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இணையவழி மூலம் மோசடி செய்யும் திருடர்கள், தற்போதுள்ள புதிய தொழிநுட்பங்களை கையாண்டு, நாளாந்தம் புதுப்புது வழிகளில் மோசடிகளை செய்து வருவதாக தெரிவிக்கும் கணினித்துறை நிபுணர்கள், “QR – குரோயீடுகள்” மோசடிக்காரர்களின் புதிய நம்பிக்கையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுமக்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் நம்பிக்கைக்குரிய விதத்தில் இணைப்புக்களை அனுப்பி, அவ்விணைப்புக்களில் கவனக்குறைவாக தங்களது வங்கிக்கணக்கு தொடர்பான விபரங்களை பதிந்துவிடும் பொதுமக்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தினை சுருட்டிவரும் மோசடிக்காரர்கள், இப்போது மிகுந்த பாவனையிலிருக்கும் “QR – குறியீடுகள்” மூலம் பொதுமக்களை அணுகுவதாகவும், அக்குறியீடுகளை அழுத்தும் பொதுமக்களின் விபரங்கள், இம்மோசடிக்காரர்களுக்கு கிடைப்பதாகவும், அதன்மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, “கொரோனா” தடுப்பு மருந்து பற்றிய விபரங்களில் பொதுமக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அது தொடர்பான போலி இணைப்புக்களை “QR – குறியீடுகள்” மூலமாக அனுப்பும் மோசடிக்காரர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள