“SMITTESTOPP” செயலியை அறிமுகப்படுத்தியதிலிருந்து 1,212,000 நோர்வே மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று பொது சுகாதார அமைச்சின் (FHI), “Gun Peggy Knudsen” தெரிவித்துள்ளார்.
நேற்று 700,000 க்கும் அதிகமானோர் செயலியை பதிவிறக்கம் செய்திருந்த வேளையில், இன்று இது இரட்டிப்பாகியுள்ளது.
நோய்த்தொற்று பரவுவதற்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவுகளை அளவிடுவதற்கு, சமூகத்தில் குழுக்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்த, அநாமதேய தரவை இந்த சேவை வழங்கும். மேலும், கொரோனா நோய்த்தொற்று உள்ளவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால், சுகாதார அமைப்பு செயலியினுடாக இறுதியில் உங்களுக்கு அறிவிக்கும் என்றும் Gun Peggy Knudsen மேலும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்: VG
தரவிறக்கம் செய்ய: Android , iOS
பகிர்ந்துகொள்ள