“SMITTESTOPP” : 60 விழுக்காடு மக்கள் ‘தொற்று நிறுத்தி’ செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்!

  • Post author:
You are currently viewing “SMITTESTOPP” : 60 விழுக்காடு மக்கள் ‘தொற்று நிறுத்தி’ செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்!

மக்கள் தொகையில் 60 விழுக்காடுக்கும் அதிகமானோர் பொது சுகாதார நிறுவனத்தின் (FHI) “தொற்று நிறுத்த” செயலியை (SMITTESTOPP) பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று ஒரு புதிய கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகின்றது.

சனிக்கிழமையன்று, நோர்வேயில் 1,218,000 பேர் “Smittestopp” செயலியை பதிவிறக்கம் செய்ததாக FHI தெரிவித்துள்ளது. அதேபோல் திங்களன்று, “Ipsos” நடத்திய ஒரு ஆய்வில், 60 விழுக்காடு மக்கள் தாங்கள் “Smittestopp” செயலியை பதிவிறக்கம் செய்ததாகக் கூறியுள்ளார்கள் (NTB).

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள