அடுப்பை தொடர்ந்து வெடிக்கும் “லைற்றர்கள்’ – சாவகச்சேரியில் ஒருவருக்கு கருகியது மீசை

You are currently viewing அடுப்பை தொடர்ந்து வெடிக்கும் “லைற்றர்கள்’ – சாவகச்சேரியில் ஒருவருக்கு கருகியது மீசை

யாழ்.சாவகச்சேரியில் லைற்றர் மூலம் சிகரெட்டை பற்றவைத்தபோது லைற்றர் வெடித்ததில் தீப்பற்றி மீசை கருகிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது.அதனால் , அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான அனர்த்தம் ஏற்படவில்லை.

அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர்லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் , லைட்டர் வெடித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடிப்புக்கள் வெடிப்பு சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில்,தற்போது சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments