அணுசக்தி போரை தூண்டும் மேற்குலகம்! எச்சரிக்கும் ரஷ்யா!!

You are currently viewing அணுசக்தி போரை தூண்டும் மேற்குலகம்! எச்சரிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் விடயத்தில் சுமூகநிலையொன்று ஏற்படுவதை விரும்பாத மேற்குலகமும், நேட்டோவும் அணுவாயுதப்போரொன்றை விரும்பி அழைப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்ய தலைநகரில், கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த ரஷ்ய பாதுகாப்புத்துறை, உக்ரைனுக்கு அதிநவீன இராணுவத்தளபாடங்களை அமெரிக்கா, நோர்வே, போலந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகள் வழங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில், ரஷ்ய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள “Krim” தீவின் மீது இவ்வாயுதங்களை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்துமானால், அது, போரின் நிலையில் பாரிய மாற்றத்தை கொண்டுவருவதோடு, அணுவாயுத பாவனைக்கு வழிவகுக்கும் எனவும், இதையே மேற்குலகமும், நேட்டோவும் விரும்புகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அணுவாயுதபலம் கொண்ட நாடொன்று, இராணுவரீதியில் அடக்கப்படும்போது, அந்நாடு அணுவாயுதத்தை பாவிப்பது தவிர்க்கமுடியாதது என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கருத்துரைத்துள்ளதை ஆமோதித்திருக்கும் கிரெம்ளின் மாளிகை பேச்சாளர், அதுவே ரஷ்ய இராணுவத்தின் கொள்கையாகும் என ஆமோதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments