அதிகளவான ஹெரோயின் போதை ஊசியை ஏற்றிய நபர் உயிரிழப்பு!

You are currently viewing அதிகளவான ஹெரோயின் போதை ஊசியை ஏற்றிய நபர் உயிரிழப்பு!

யாழில் இதுவரை 15 இளம் உயிர்கள் வாழ்வினை தொலைத்துள்ளனர்

அதிகளவான ஹெரோயின் போதை ஊசியினை எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

தலங்காவில் பிள்ளையார் கோவில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 25 வயதான கிறிஸ்டி சதீஷ்குமார் டனிஷ்ரன் என்ற இளைஞனே உயிர் இழந்துள்ளார்.

இவர் நேற்று மாலை நான்கு நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஹெரோயின் ஊசி ஏற்றியுள்ளார்.

நான்காவதாக இவர் ஊசியினை பரிமாற்றி ஏற்றுக் கொண்ட பொழுது, நரம்பு ஊடாக காற்றின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

அதன் பின்னர் அவர் சுவாச பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.

அதிகளவாக ஹெரோயின் போதை ஊசியை ஏற்றிக் கொண்டதால் இவர் உயரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments