அமெரிக்கா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கி சூடு – 11 பேர் படுகாயம்!

You are currently viewing அமெரிக்கா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கி சூடு – 11 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் மிர்ட்டல் நகர கடற்கரை பிரபல சுற்றுலா தலம் ஆகும். அந்த வகையில் வார இறுதியை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர். அப்போது ஒருவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.

இதனை பார்த்த பொதுமக்கள் அங்கும், இங்குமாக ஓடினர். இந்த தாக்குதலில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் இதற்கு பதிலடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply