அமெரிக்கா ; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது!

  • Post author:
You are currently viewing அமெரிக்கா ; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் இறப்பு அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் இன்று புதிதாக 11 ஆயிரத்துக்கும் மேலாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,019,360 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு இன்று, இதுவரை மேலும் 408 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 1,12,645 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 767,144 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

பகிர்ந்துகொள்ள