அரசு கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு! ஜெர்மனி பாதுகாப்பு துறை அதிரடி!!

You are currently viewing அரசு கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு! ஜெர்மனி பாதுகாப்பு துறை அதிரடி!!

ஜெர்மனியில், அரசுக்கெதிரான சதிப்புரட்சிக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பலர் இன்று புதன்கிழமை, 07.12.2022 ஜெர்மனிய விசேட படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனிய நாசிகளின் சித்தாந்தங்களை பின்பற்றும் குழுவினர் என அறியப்பட்டவர்களின் வலையமைப்பை ஊடறுத்த 3000 ஜெர்மனிய விசேட படையினர், ஜெர்மனி எங்கும் சுமார் 130 வசிப்பிடங்களை அதிரடியாக கைப்பற்றி சோதனையிட்டதில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ரஷ்யர், 22 ஜெர்மனியர்கள் அடங்குவதாகவும், இவர்களில் ஜெர்மனிய அரச வம்சத்தை சேர்ந்த இளவரசர் “Heinrich XIII” மற்றும் ஜெர்மனியின் இராணுவப்பிரிவொன்றை வழிநடத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரும் அடக்கமெனவும் ஜெர்மனிய அரசு வழக்குரைஞர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளதாக மேற்குலக ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியின் முக்கியமான நாளொன்றில், ஜெர்மனிய நாடாளுமன்றத்தை கைப்பற்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, ஜெர்மனிக்கான புதிய தலைவராக, தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜெர்மனிய இளவரசர் ” Heinrich XIII” ஐ அறிவிப்பதே மேற்படி நாசிகளின் திட்டமாக இருந்தது எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments