அரசு நிகழ்ச்சியின்போது கால்சட்டையில் சிறுநீர் கழித்த சூடான் ஜனாதிபதி!

You are currently viewing அரசு நிகழ்ச்சியின்போது கால்சட்டையில் சிறுநீர் கழித்த சூடான் ஜனாதிபதி!

அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்ததாக கூறி பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட்(71), அரசு நிகழ்ச்சி ஒன்றில் தனது கால்சட்டையில் சிறுநீர் கழித்தது ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

டந்த ஆண்டு டிசம்பர் 13ம் திகதி புதிதாக கட்டப்பட்டு இருந்த சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட் அவரது கால்சட்டையில்(பேண்ட்) சிறுநீர் கழித்தது அங்குள்ள கேமராக்களில் பதிவானது.

ஜூலை 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றதில் இருந்து சல்வா கீர் மயர்டிட் அதிபராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி குறித்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், அது குறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் தற்போது பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பத்திரிகையாளர்களை ஜனவரி 3ம் திகதி ரகசிய உளவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ) கோரிக்கை விடுத்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments