ஆடு மேய்த்த பெரியவரின் மனிதாபிமானம் கண்டு வியந்த மக்கள்!

You are currently viewing ஆடு மேய்த்த பெரியவரின் மனிதாபிமானம் கண்டு வியந்த மக்கள்!

கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் கண்டெடுத்த 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த நபர் வீதியில் கிடந்த 95,000 பணத்தினை எடுத்து கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்திருந்த நிலையில், மேற்படி பணத்திற்கு யாரும் உரிமை கோராத நிலையில் குறித்த பணம் நேற்றைய தினம் கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா காவற்துறையினர் குறித்த பணத்தினை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆடு மேய்த்த பெரியவரின் மனிதாபிமானம் கண்டு வ மக்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments