ஆனந்தபுரத்தில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!

You are currently viewing ஆனந்தபுரத்தில் புதையல் தோண்டிய 7 பேர் கைது!

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய 7 பேர் சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று, புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரை கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 3 பேரும் ஜா எல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி பகுதியினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளதுடன், இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இயந்திரம் ஒன்று, மண்வெட்டி, அலவாங்கு, இரண்டு மோட்டார் சைக்கிகள், கார் ஒன்று என்பன சிறீலங்கா காவற்துறையினரால் மீட்கப்பபட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments