ஆபாசக்காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளவரசர் ஹரி!

You are currently viewing ஆபாசக்காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளவரசர் ஹரி!

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன் ஒரு நடிகையாக இருந்தபோது நடித்த ஆபாசக்காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி, ஒரு அமெரிக்க நடிகையும், விவாகரத்து ஆனவருமான மேகனை காதலித்த விடயம், அந்த நேரத்தில் ராஜ குடும்பத்தில் புயலைக் கிளப்பியது

மேகன் ராஜ குடும்பத்தில் உருவாக்கிய புயல் இன்றும் தீர்ந்தபாடில்லை. ஹரியும் மேகனும் காதலிக்கத் துவங்கியதுமே, மேகன் அரைகுறை ஆடைகளில் விளம்பரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த காட்சிகளை வெளியிட்டு கவனம் ஈர்த்துக்கொண்டன ஊடகங்கள்.

மின்சார ஷாக் சிகிச்சை தேவைப்பட்டதாம் ஹரிக்கு குறிப்பாக, Suits என்னும் தொலைக்காட்சித் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார் மேகன். அப்படி அவர் நடிக்கும்போது, ஒருநாள் ஹரி ஷூட்டிங் பார்க்கச் சென்றிருந்தாராம். அப்போது தன் காதலியாக இருந்த மேகனுடன் ஒரு நடிகர் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளை ஹரி காண நேர்ந்ததாம்.

தன் காதலி வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த அந்த ஆபாசக் காட்சிகளைப் பார்த்ததால், அந்த காட்சிகளை தன் மனதில் இருந்து அகற்ற, தனக்கு மின்சார ஷாக் சிகிச்சை தேவை என தான் நினைத்ததாகக் கூறியுள்ளார் ஹரி.

இந்த விடயங்கள் எல்லாம், அவரது Spare என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments