ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோருக்கு வெளியே மலிவான விருப்பங்களை பயனர்களுக்கு சுட்டிக் காட்டுவதை தடுத்ததற்காக ஐரோப்பிய நாடுகளின் கண்காணி்ப்பு அமைப்பான ஐரோப்பிய ஆணையம் 4 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.
அதேபோல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களை விளம்பரங்களைப் பார்ப்பதா அல்லது அவற்றைத் தவிர்க்க பணம் செலுத்துவதா என்பதைத் தேர்வு செய்ய கட்டாயப்படுத்தியதால், மெட்டா தளங்களுக்கு 1,900 கோடி அபராதம் விதித்துள்ளது.
மார்ச் மாதத்தில் இந்த முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்புடன் அதிகரித்து வரும் வர்த்தகப் போரின் காரணமாக அதிகாரிகள் அதைத் தவிர்த்து வந்தனர்.
அமெரிக்க நிறுவனங்களைப் பாதிக்கும் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகள் குறித்து டிரம்ப் பலமுறை புகார் அளித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.