ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – மன்னிப்புச் சபை கண்டனம்!

You are currently viewing ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – மன்னிப்புச் சபை கண்டனம்!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு இது ஏற்றுக்கொள்ள முடியாதது அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும்,சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது,பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments