இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல்!

You are currently viewing இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல்!

இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான்.

குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறான்.

அந்நிலையில் சிறுவன் விற்பனை அகத்தில் இருந்து நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது, தெல்லிப்பளை பகுதியில் இருந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று சிறுவனை வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments