இந்தியாவில், சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்!

  • Post author:
You are currently viewing இந்தியாவில், சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்!

ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் மத்தியப்பிரதேச மாநிலம் வழியாக சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளன.

மத்தியப்பிரதேசத்தின் சித்தி மாவட்டப்பகுதியில் இருந்து சத்தீஸ்கரின் கோரியா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில், வெட்டுக்கிளிகள் கூட்டம் நுழைந்திருப்பதாகவும், ஆனாலும் இந்த வெட்டுக்கிளிகளால் இதுவரை மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், மீறி நுழையும் பட்சத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கான பணிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் சத்தீஸ்கர் மாநில வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள