இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்த தமிழர் டெல்லியில் கைது!

You are currently viewing இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்த தமிழர் டெல்லியில் கைது!

ஆயுதப் பயிற்சி பெற எல்லை கடந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட இருவர் டெல்லியில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவல் பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிலர் மும்பை வழியாக டெல்லி வருகின்றனர் என டெல்லி போலீசாருக்கு கடந்த 14-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக ஆயுத பயிற்சி பெற சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து உஷாரான டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 2 பேர் பிடிபட்டனர் இந்நிலையில் டெல்லி செங்கோட்டை பின்புறம் உள்ள சுற்றுச்சாலையில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல்லா என்ற அப்துல் ரகுமான் (வயது 26), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காலித் முபாரக் கான் (வயது 21) என தெரியவந்தது. பாகிஸ்தானில் உள்ளவர்களால் சமூக வலைதளம் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்ட இருவரும் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர், பாகிஸ்தான் நபர்களின் வழிகாட்டலின்படி எல்லை கடந்து அந்நாட்டுக்கு சென்று ஆயுத பயிற்சி பெறவும் முடிவு செய்துள்ளனர் என டெல்லி போலீசார் கூறினர்.

துப்பாக்கிகள், கத்தி பறிமுதல் அந்த 2 நபர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், ஒரு கத்தி, கம்பியை துண்டிக்கும் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டய்து. கைது செய்யப்பட்ட 2 பேர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேனும் பயங்கரவாதச் செயல்களை நடத்த திட்டமிட்டிருந்தனரா? என விசாரித்துவருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments