இந்தியா இலங்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்? – வைகோ கேள்வி!

You are currently viewing இந்தியா இலங்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்? – வைகோ கேள்வி!

ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ, நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார். அப்போது அவர், “ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையில் இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது, என்ன காரணங்களுக்காக இந்தியா வாக்களிக்கவில்லை. அண்மையில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போர்க்கப்பல் வந்தது. இந்தியாவின் நலனை காக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ”ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாம் வாக்களிக்கவில்லை. இது இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாகும். முந்தைய அரசாங்கங்களும் இதையே செய்தது. தமிழ் சமூகம், சிங்கள சமூகம் மற்றும் ஏனைய சமூகங்களை உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். கடுமையான பொருளாதார சூழ்நிலையில் இலங்கைக்கு நாம் உதவ முன்வரவில்லை என்றால், நாம் நமது பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டது போலாகிவிடும்” என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments