இந்தியா செல்ல முயற்சித்த 6 பேரில் மூவருக்கு விளக்கமறியல் !

You are currently viewing இந்தியா செல்ல முயற்சித்த 6 பேரில் மூவருக்கு விளக்கமறியல் !

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா  செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் (28) புதன் கிழமை மாலை உத்தரவிட்டார்.

திருகோணமலை  பகுதியைச்  சேர்ந்த இரண்டு ஆண்கள்,ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை(27) இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்திய செல்ல முயன்ற போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரையும் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் புதன்கிழமை (28) காலை  தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவா்கள்  மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களையும் பெண் ஒருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை(06-10-2022) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.ஏனைய 18 வயதுக்கு குறைந்த மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments