இளைஞனைக் கடத்தி தாக்கிய பின் வீசி விட்டு சென்ற கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறை!!

You are currently viewing இளைஞனைக் கடத்தி தாக்கிய பின் வீசி விட்டு சென்ற கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறை!!

வீதியால் சென்ற தன்னை கோப்பாய் சிறீலங்கா காவல்நிலைய உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்திச் சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி விழழு, வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வார கால பகுதிக்குள் சிறீலங்கா காவல்நிலைய உத்தியோகஸ்தர்களினால் மனிதவுரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நான்கு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு, காவல்த்துறை உயர் அதிகாரிகளிடம் விளக்கங்கள் கோரப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ள போதிலும் , கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையால் மனிதவுரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments