இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்த சவுதி அரேபியா

You are currently viewing இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்த சவுதி அரேபியா

பாலஸ்தீன காசாவின் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் தாக்குதல் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கி, தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரபு நாடுகள் பங்கேற்ற இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (Organization of Islamic Cooperation) சந்திப்பு, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் இராணுவ தளங்கள் வழியாக இஸ்ரேலுக்கு இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பது, அமெரிக்காவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தி வைப்பது, இஸ்ரேலுடன் அனைத்துவிதமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்து கொள்வது, வளைகுடா நாடுகளின் வான்வெளி மீது இஸ்ரேல் விமானங்கள் பறப்பதை தடை செய்வது, போர்நிறுத்தத்திற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஒரு குழுவை அனுப்புவது உள்ளிட்ட 5 நடவடிக்கைகளை எடுக்க ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

ஆனால், குறித்த தீர்மானத்தை சவுதி அரேபியா ஆதரவு அளிக்கவில்லை.

சவுதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், சூடான், மொரோக்கோ, எகிப்து, ஜோர்டான், மவுரிடானியா மற்றும் ஜிபவுடி ஆகிய நாடுகளும் இத்தீர்மானத்தை எதிர்த்தன. அக்டோபர் 7ஆம் திகதிக்கு முன்பாக இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் உடன்படிக்கைகள் ஏற்பட இருந்தன.

ஆனால், போரின் காரணமாக அந்த முயற்சிகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது இஸ்ரேலுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையில் சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments