உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்!இதுவரை 30 சடலங்கள் மீட்பு!

You are currently viewing உக்ரைன்  மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்!இதுவரை 30 சடலங்கள் மீட்பு!

உக்ரைனில் 9 மாடி குடியிருப்பு வளாகம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்த நிலையில், இதுவரை 30 சடலங்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் Dnipro பகுதியிலேயே இந்த கொடூர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 30 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 40 பேர்களின் நிலை தொடர்பில் தகவல் இல்லை என கூறுகின்றனர். குறித்த ஏவுகணை தாக்குதலில் 13 இளையோர் உட்பட 72 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

சுமார் 1,100 பேர்கள் குடியிருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இடிபாடுகளில் சிக்கி பலர் புதைந்திருக்கலாம் என்றே அஞ்சுகின்றனர். மேலும், உயிருடன் மக்களை அங்கிருந்து மீட்கும் வாய்ப்பு இனி மிக குறைவு எனவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, சுமார் சுமார் 72 குடியிருப்புகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும் 230 குடியிருப்புகள் பெயரளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும் , இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வீடிழந்த நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments