உக்ரைன் நகரை பழிக்குப் பழிவாங்கும் ரஷ்யா!

You are currently viewing உக்ரைன் நகரை பழிக்குப் பழிவாங்கும் ரஷ்யா!

புத்தாண்டு பிறக்க சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரம் ட்ரோன் படைகளால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் நகரம் மீது உக்ரைன் தொடுத்த கடுமையான தாக்குதலில் பலி எண்ணிக்கை 24 என உயர்ந்துள்ளது. 108 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் 37 தொகுப்பு குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பழிவாங்கும் வகையில் உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதுவரை 28 பேர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குடியிருப்பு வளாகங்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை ரஷ்யா இலக்கு வைத்துள்ளதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Lesia Vasylenko குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தங்களுக்கு ஆயுதம் அளிப்பவர்கள், இந்த போர் முடிவுக்கு வரும் வரையில் ஆயுத உதவிகள் அளிப்போம் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்,

இதனிடையே, பெல்கோரோட் மீதான தாக்குதலுக்கு தாங்கள் பழிவாங்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக 200க்கும் மேற்பட்ட உக்ரைன் போர் கைதிகளுக்கு ரஷ்யா சிறைத்தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments