உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துமா? புடின் நடவடிக்கையால் பரபரப்பு!

You are currently viewing உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துமா? புடின் நடவடிக்கையால் பரபரப்பு!

கடந்த 2002-ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய துருப்புக்கள் தாக்குதலை தொடங்கிய நிலையில், போர் தொடங்கி 1000 நாளில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுத பயன்பாடு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட புதிய கொள்கையில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாடு, ரஷ்யாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால், அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.

இந்த நடவடிக்கையால் உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க அண்மையில் உக்ரைனுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளது, மேற்கு நாடுகளை எச்சரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply