உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான ட்ரோன் தாக்குதல்!!

You are currently viewing உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான ட்ரோன் தாக்குதல்!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 367 ட்ரோன்களை கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

உக்ரைனின் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்திருந்தாலும், இந்தத் தாக்குதலின் அளவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply