உலகநாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா!

You are currently viewing உலகநாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா!

வடகொரியா அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை 48 மணி நேரத்தில் ஏவி உள்ள நிலையில் சர்வதேச நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வடகொரியா ஏவுகணை ஏவிய நிலையில் அது ஜப்பான் பகுதியில் விழுந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டு இருப்பதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இது குறித்து தென்கொரியா ராணுவ படை தளபதி கூறிய போது கடற்கரையின் கிழக்கு பகுதியை நோக்கி வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏவியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேவேளை இதனை ஜப்பான் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments