உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானும் நாளை முதல் எல்லைகளை மூடுகிறது!

You are currently viewing உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானும் நாளை முதல் எல்லைகளை மூடுகிறது!

கவலைக்குரிய புதிய ஓமிக்ரோன் உரு திரிபு வைரஸ் குறித்த கவலைகளை அடுத்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், அனைத்து வெளிநாட்டினருக்கும் அதன் எல்லைகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடவுள்ளது.

இதேவேளை, கட்டுப்பாடுகளைத் தளர்த்தி புலம்பெயர் தொழில் வல்லுநர்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் அவுஸ்திரேலியாவின் திட்டங்களும் புதிய உரு திரிபு வைரஸ் அச்சம் காரணமாக கைவிடப்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தொற்று நோய் நெருக்கடியை அடுத்து இரண்டு வருடங்களாக தொடரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் புதிய பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அண்மைய சில வாரங்களாக வெளிப்பட்டு வந்த நிலையில் புதிய திரிபு மீண்டும் அச்சத்தை தூண்டி, நாடுகள் தங்கள் எல்லைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் உரு திரிபு முந்தைய திரிபுகளைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், போட்ஸ்வானா, பிரிட்டன், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, ஹெங்கொங், இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் புதிய திரிபு தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஓமிக்ரோன் உரு திரிபு கவலைக்குரியது என பட்டியலிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு,

இதன் தீவிரத்தின் அளவைப் புரிந்து கொள்ள சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை ஆகலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கவலைக்குரிய புதிய ஓமிக்ரோன் உரு திரிபு வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து வெளிநாட்டினருக்கும் ஜப்பான் தனது எல்லைகளை மூடும் என்று பிரதமர் புமியோ கிஷிடா இன்று தெரிவித்தார்.

ஜப்பானில் இதுவரை புதிய ஓமிக்ரோன் உரு திரிபு வைரஸ் தொற்று நோயாளர்கள் எவரும் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைகளை மூட தீா்மானித்துள்ளதாக பிரதமர் புமியோ கிஷிடா குறிப்பிட்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments