உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வடகொரியாவின் செயல்!

You are currently viewing உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வடகொரியாவின் செயல்!

வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்ததாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ஹேயில்-5-23-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.

வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது ராணுவ பலத்தைக் காட்டிவருகிறது. இப்படி இருதரப்பினரும் தங்கள் வலிமையைக் காட்டி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற கப்பலும் இதில் அடங்கும்.

இந்நிலையில், இந்த கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments