எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிறீலங்கா படைகளின் அராஜகம் தொடர்கிறது..

You are currently viewing எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிறீலங்கா படைகளின் அராஜகம் தொடர்கிறது..

தையிட்டி விகாரை ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்பு காவற்துறையின் அச்சுறுத்தலும் ஆராயகமும்.

தமிழர் நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சட்ட விரோத விகாரைக்கு எதிராகப் போராடிய மக்களை இழிவாகப் பேசி அவமானப்படுத்தி விரட்டி அடக்கும் சிறிலங்கா காவல்துறையின் அரச பயங்கரவாதத்தை உலகத் தமிழினம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்!

போராளி அநுரா என போற்றும் சில இழிநிலையுற்ற அரச ஒத்தோடித் தமிழர்கள் இன்று தமிழர்க்காகப் போராடுபவர்களை அடக்கும் சிங்கள அரச படைக்கு எதிராகக் குரல் கொடுக்காவிட்டாலும் இதைப் பார்த்தாவது “சிங்கள பௌத்த பேசினவாதமே (இனவாதமே!) இன்றைய அரசின் உண்மை முகம் என உணர்வார்களா?/அறிவார்களா?

தமிழர்க்காகப் போராடுபவரை அடக்கும் அரச படை அராஜகத்தைத் தட்டிக் கேட்காமல் மாறாக அரச தலைவர் மேல் மயக்கத்தோடு புகழ் பாடும் நபர்களை இனியும் “தமிழர்” என எப்படி அழைப்பது?

போராடும் குணம் கொண்ட உண்மைத் தமிழர்கள் ஒருமித்த குரலில் போராடினால் மட்டுமே தமிழர்க்கு மீட்சி!

பகிர்ந்துகொள்ள

Leave a Reply