ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மன்னார் விஜயம்!

You are currently viewing ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மன்னார் விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச்  (Marc-André Franche) 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்தார்.

 

4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மன்னார் விஜயம்! 1

மேலும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரையும் சந்தித்து மன்னார் மாவட்டத்தின் மனித உரிமைகள் நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மன்னார் விஜயம்! 2

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதோச மனித புதைகுழியையும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மன்னார் விஜயம்! 3

இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினருடன்  மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகள்,மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரும்  சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments