ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது!

You are currently viewing ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது!

இரட்டைக் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பங்களுக்கு இடையே நீண்ட கால நீடித்த பகை நேற்று வாள்வெட்டு மோதலாக மாறி இரட்டைக் கொலையில் முடிந்தது.

சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு (நவ.13) 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்தனர்.

பகிர்ந்துகொள்ள