ஒரே வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழப்பு ! புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

You are currently viewing ஒரே வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழப்பு ! புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலியாகினர்.

உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், நட்சத்திர விடுதிகளில் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடினர்.

இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் சுற்றி புத்தாண்டை வரவேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தில் நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர்.

புத்தாண்டை கொண்டாட ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த பாரவூர்தி மீது அவர்கள் சென்ற வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments