தமிழ்க்கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன-மாவை

You are currently viewing தமிழ்க்கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன-மாவை

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய தமிழ்க் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

கடந்த கலந்துரையாடல் அவசர அவசரமாக இடம்பெற்ற நிலையில் இம்முறை அனைவரையும் அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஒற்றையாட்சி குழியுக்குள் தமிழ்மக்களை வீழ்த்துவதற்கு முடிவுசெய்துள்ள இந்த தமிழ் கட்சிகள் தமிழ்மக்களை ஏமாற்றுவதற்காகவே தொடர்ச்சியாக சந்திப்பு என்ற நாடகத்தை இயக்கி வருவதாக அவதானிகள் விசனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments