கணவன் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் தற்கொலை!

You are currently viewing கணவன் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண்  தற்கொலை!

யாழ் கல்வியங்காடுப் பகுதியில் கணவர் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் 26 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்ததாக  தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. உயிரிந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்தவர் என கூறப்படுகின்றது.

அதேசமயம் குறித்த பெண் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையானவர் என்றும் இதனால் கணவர் பல தடவைகள் அவரை எச்சரித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பான முரண்பாடே இவரது தற்கொலைக்கு காரணம் என சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான முடிவுகள் முட்டாள்தனம் என ஊடகங்களும் சமூகமும் விளிப்பூட்டினாலும் தற்கொலைகள் நின்றபாடில்லை என்பது கவலைக்குரியது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments